18 May 2019

தேவாவியே நீர் அவிழ்ப்பீர்


143.   Eternal Spirit, by whose power.        (164)  (167)

1.         தேவாவியே! நீர் அவிழ்ப்பீர்
            எப்பாவக் கட்டையும்;
            எல்லோரின் மேலும் ஊதுவீர்;
            உயிர்ப்பித்து எழும்பும்!

2.         மெய்வழி காட்டி, பயமும்
            நீர் நீங்கச் செய்குவீர்;
            கல்நெஞ்சில் அன்பு பொங்கவும்
            வந்தனல் மூட்டுவீர்.

3.         துன்புற்று, ஏங்கி விழுந்தால்,
            கைதூக்கித் தாங்குவீர்;
            ப்ரசன்னமாகித் தேற்றலால்
            சந்தேகம் நீக்குவீர்.

4.         இவ்வருள் வேதம் வாசிக்க,
            பேரொளி வீசுவீர்;
            கேட்போரின் நெஞ்சில் பதிய
            சகாயம் பண்ணுவீர்.

5.         வல்லாவியே! இக்கூட்டத்தை
            நீர் சந்தித்தருளும்;
            ஏராள அருள் மாரியை
            இப்போதே பொழியும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...