பூமியின் நற்குடிகளே கர்த்தரை என்றும்


23. (51 T)     போற்றிப் பாடிக்கொண்டாடுவோம்

மோகனம்                100-ம் சங்கீதம்                ஆதி தாளம்

பல்லவி
          பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும்
          போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள்.

அனுபல்லவி
            ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன்
            சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். - பூமி

சரணங்கள்
1.         கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள்,
            காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார்.
            அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம்,
            ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். - பூமி

2.         ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும்,
            அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும்,
            சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து
            சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். - பூமி

3.         கர்த்தர் மகாவல்லவர், கர்த்தர் அருட்கிருபை,
            காசினியில் தேடினும் காண்பீரோ பெரியது.
            தற்பரன் உண்மையோ தலை முறைக்கு முள்ளது,
            தலை வணங்கியே பரன் தாள் பணிந்து மகிழ்வீர். - பூமி

4.         ஆதி பிதா தமக்கும் அரிய குமாரனுக்கும்,
            அரூபியான தேவனின் ஆவி பரிசுத்தர்க்கும்,
            நீதி முறை வழுவா நிமல திரியேகர்க்கும்
            நித்திய மகிமையும் புகழுண்டாகவே. ஆமென்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு