தந்தை தன் சிறு மைந்தனைக்


126.   As helpless as a child who clings     (559)

1.         தந்தை தன் சிறு மைந்தனைக்
                        கையேந்தித் தாங்குவான்;
            சீராட்டப்பெற்ற பாலகன்
                        அபாயம் நினையான்.

2.         அவ்வாறே, என்னை, தந்தையே,
                        காப்பாற்றித் தாங்குவீர்;
            என் பலவீனம் நீங்கவும்
                        கையேந்தி வருவீர்.

3.         மாதாவின் நேச மடியில்
                        சாய்ந்தாடும் குழந்தை
            தாயாரின், முகம் பார்க்கையில்
                        மறக்கும் க்லேசத்தை.

4.         அவ்வாறே, நேச ரக்ஷகா!
                        உம் அருள் முகத்தை
            நான் பார்க்க ஸ்திரமாக்குவீர்!
                        என் விசுவாசத்தை.

5.         தாய் தந்தைப் பக்கம் பாலரை
                        உட்கார வைக்குங்கால்,
            சந்தோஷித் துள்ளங்களிப்பார்
                        பெற்றோரின் அன்பினால்.

6.         அவ்வாறே திருப்பாதத்தில்
                        ஆனந்தம் அடைந்தேன்;
            மென்மேலும் அருள் நாதரின்!
                        பேரன்பை ருசிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு