இயேசு என்னும் நாமத்தை


150.   Name of Jesus, highest Name.         (216)

1.         யேசு என்னும் நாமத்தை
            வானம் பூமி வாழ்த்துமே;
            திவ்ய அன்பின் ஆழத்தை
            அது தோன்றச் செய்ததே.

2.         யேசு என்னும் நாமத்தால்
            எந்தன் தாகம் தீர்ந்ததே;
            பேரானந்த வெள்ளத்தால்
            பூரிப்புமுண்டாயிற்றே.

3.         யேசு என்னும் நாமமே
            அருள் செல்வம் இன்பமும்
            மோட்சவீடும் ஈயுமே
            ஆத்துமாவைப் போஷிக்கும்.

4.         யேசு எந்தன் பாவத்தை
            நீக்கிச் சுத்தமாக்கினார்;
            ஒப்பில்லா தம் ஜீவனை
            என்னில் தந்து காக்கிறார்.

5.         யேசு என்னும் நாமத்தில்
            சர்வ நன்மை காண்கிறேன்;
            மாறாவல்ல மீட்பரில்
            அன்பு கூர்ந்தானந்திப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு