18 May 2019

இயேசுவே கல்வாரியில்


102.   “Jesus keep me near the Cross.”              (134)

1.         யேசுவே! கல்வாரியில்
            என்னை வைத்துக்கொள்ளும்;
            பாவம் போக்கும் ரத்தமாம்
            திவ்ய ஊற்றைக் காட்டும்.

பல்லவி
                         மீட்பரே! மீட்பரே!
                         எந்தன் மேன்மை நீரே!
                         விண்ணில் வாழுமளவும்
                         நன்மை செய்குவீரே!

2.         பாவியேன் கல்வாரியில்
            ரட்சிப்பைப் பெற்றேனே.
            ஞான ஜோதி தோன்றவும்
            கண்டு பூரித்தேனே.

3.         ரட்சகா! கல்வாரியின்
            காட்சி கண்டோனாக
            பக்தியோடு ஜீவிக்க
            என்னை ஆள்வீராக.

4.         இன்னமும் கல்வாரியில்
            ஆவலாய் நிற்பேனே,
            பின்பு, மோட்ச லோகத்தில்
            என்றும் வாழுவேனே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...