18 May 2019

அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

சு.கீ:113

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

113.   Seek ye first                  (41)

 

1.       அற்ப வாழ்வை வாஞ்சியாமல்,

            இன்பம், செல்வம் பின்பற்றாமல்,

            தேவ நேசத்தை ஓயாமல்

                        நாடுவாய்! நாடுவாய்!

 

2.         விரும்பாதே பேர் ப்ரஸ்தாபம்,

            லோகமகிமை ப்ரதாபம்

            ஆத்மவாழ்வின் நித்தியலாபம்

                        நாடுவாய்! நாடுவாய்!

 

3.         நாடுவாய் தேவாசீர்வாதம்

            கர்த்தர்ஈயும் சற்பிரசாதம்

            பாவந்தீரத் திருப்பாதம்

                        நாடுவாய்! நாடுவாய்!

 

4.         மீட்பர்போல் சுத்தாங்கமாக,

            தாழ்மையோடு சாந்தமாகத்

            தொண்டுசெய்ய ஆவலாக

                        நாடுவாய்! நாடுவாய்!

 

5.         பிறர் யேசுவண்டை சேர

            அவராலே கடைத்தேற,

            தேவசித்தம் நிறைவேற,

                        நாடுவாய்! நாடுவாய்!

 

6.         அருள்நாதர் அரசாளும்

            காலம் வந்து; சர்வத்தாளும்

            மீட்பைக் காணவும், எந்நாளும்

                        நாடுவாய்! நாடுவாய்!

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...