28 February 2019

ஜீவனேசு கிருபாசன்னா


எனின் சிறுமை தீர்த்தருள்

180. (224) கமாஸ்                                          சாபு தாளம்

பல்லவி

                   ஜீவனேசு கிருபாசன்னா, எனின்
                   சிறுமை தீர்த்தருள் ஓசன்னா!

சரணங்கள்

1.         காவில்[1] ஆதஞ் செய் பாவமூடவே,
            கடிய பேய் நரகோடவே,
            பூவுள்ளோருமைப் பாடவே, பரி
            பூரண க்ருபை நீடவே. - ஜீவ

2.         தொண்டர் பாதக ரண்டகங் கெட,
            துயரமேபடும் அத்தனே,
            தொண்டன் நின் சரணண்டினேன்; எனின்
            நோயைத் தீர், பரிசுத்தனே! - ஜீவ

3.         அடியர் அடி பெற, அலகை அழல் விழ,
            அரிய பொன்முடி கொடுபட,
            படியில் நான் படுங் கொடிய விடர் கெட,
            பலது தீமையு முறிபட. - ஜீவ

- தேவசிகாமணி சாஸ்திரியார்


[1] இரவு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...