பாதம் வந்தனமே வரப்பிர


பாதம் வந்தனமே

84. (59) யமுனாகல்யாணி                                 ரூபகதாளம்

பல்லவி
                        பாதம் வந்தனமே! - வரப்பிர
                        சாதம் எந்தனமே.

சரணங்கள்

1.         ஆதரவொடு வேதமே விடுத்
            தாளும் அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப்
            பதனே, சுசிகர - பாதம்

2.         பேசுதற்கரிதான துத்திய
            பெருமைக் கோமானே,[1] மெய்ச் சீமானே, அருள்
            கோனே, சுசிகர - பாதம்

3.         ஞானமாய் நரர்க் கான ஜீவனை
            நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர - பாதம்

4.         தீவினை தொலைத் தாவியே மிகுத்
            தேவும் இங்கிதமே,[2] என் ரஞ்சிதமே, நீ
            சந்ததமே! சுசிகர. - பாதம்

5.         தாசரை விசுவாசமாய்க் கையில்
            தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா[3] சுசிகர - பாதம்

- ஆ. அல்வின்


[1] அரசனே
[2] பிரியமே
[3] வீரனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு