23 January 2019

இயேசுவின் நாமமே திருநாமம்


இயேசுவின் நாமமே திருநாமம்

94. (73) ஹரிகாம்போதி                                  ஆதிதாளம்

பல்லவி

            இயேசுவின் நாமமே திருநாமம்,-முழு
            இருதயத்தால் தொழுவோம் நாமும்.

சரணங்கள்

1.         காசினியில் அதனுக் கிணையில்லையே;-விசு
            வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. - இயேசு

2.         இத்தரையில் மெத்தவதி சயநாமம்;-அதை
            நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம். - இயேசு

3.         உத்தம மகிமைப் பிரசித்த நாமம்;-இது
            சத்திய விதேய மனமொத்தநாமம். - இயேசு

4.         விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம்;-நமை
            அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். - இயேசு

5.         பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி;-பெரும்
            பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. - இயேசு

-ச. ஞானமணி


No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...