பாவி நான் என்ன செய்வேன்


பாவி நான் என்ன செய்வேன்?

57.     (101) நாதநாமக்கிரியை                                  சாபுதாளம்.

பல்லவி

                        பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,
                        ஜீவன் நீர் விட்டதற்காய்?

அனுபல்லவி

            தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
            தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி

சரணங்கள்

1.         நாடி எனைத் தயவாய்-மணஞ் செய்ய-தேடி வந்தீர், அரசே
            ஆடுகளுக்காக நீடி உயிர் தர‌,
            பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? - பாவி

2.         பொன்னுல காதிபனே,-தேவரீர்-என்ன செய்தீர், ஐயனே?
            சின்னப் படுத்தவும் கன்னடித்தடிக்கவும்,
            சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும். - பாவி

3.         வாரால் அடிக்கப்பட்டு,-குட்டுண்டு-வாதைப்ட்டெண்ணம் அற்றீர்;
            சீரா[1] மனுடவ தாரா, சருவாதி
            காரா, பரம குமாரா, ஓலோலமே! - பாவி

4.         வாதை உமக்கெதினால்-உண்டாயிற்று?-பாதகி பாவத்தினால்
            வேதம் நிறைவுற, ஆதி பவம் அற‌,
            நீதி தரும் யேசு நாத சுவாமியே. - பாவி

5.         குற்றமற்ற மீட்பர்,-பவக்கடன்-முற்றும் அறத்தீர்ப்பர்,
            கொற்ற வர்க்கும், கல்வி கற்றவர்க்கும், சுரர்
            மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே. - பாவி
- வே. சாஸ்திரியார்


[1] மேன்மையுள்ளோரே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு