எத்தனை நாவால் துதிப்பேன்
எத்தனை நாவால் துதிப்பேன்?
108. அமிர்தகல்யாணி சாபு
தாளம்
பல்லவி
எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப்
புகழ்ந்து.
அனுபல்லவி
நினைக்க
நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,
நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும்.
- எத்தனை
சரணங்கள்
1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சணை செல்வம். - எத்தனை
2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்
பேதை பலவீனம் பாராதருள் கோனே!
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! -
எத்தனை
3. துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து,
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு. -
எத்தனை
- சவரிராயன் ஏசுதாசன்
Comments
Post a Comment