ஜீவனே நித்திய ஜீவனே


ஜீவனே நித்திய ஜீவனே

92. (68) வனஸ்பதி                                         ஆதிதாளம்

பல்லவி

                ஜீவனே, நித்திய ஜீவனே!
                ஜீவனே, பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
                ஜீவனே, நித்திய ஜீவனே!

அனுபல்லவி

                        காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த - ஜீவனே

சரணங்கள்

1.         வல்லமைத் திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன்
            துல்லிபத்தின்[1] ஞான தீபன், நல்லவர்க்கருள் தயாபன்
            அல்லிருள்[2] போதே-அடர்-புல்லதின் மீதே-வரல்
            ஆன வான மோன ஞான நேசமே! - ஜீவனே

2.         நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன்,
            சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்,
            சித்திரச் சுதனே,-திரி-தத்வ அற்புதனே,-பர
            தேசு லாச நேச மேசியா வேந்தே! - ஜீவனே

3.         வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர்
            மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர்,
            மட்டளவற்றோர்,-மாட்டுக்-கொட்டிலுற்றோர்-இன்று
            வாழ்த்தி, ஏற்றி, போற்றி, ஸ்தோத்திரஞ் சொல்வோம். - ஜீவனே

- வே. சாஸ்திரியார்


[1] புகழ்பெற்றவன்
[2] சுத்தத்தின்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு