இயேசு நசரையி னதிபதியே


யேசு நசரையின் அதிபதியே

95. (79) தோடி                                 ஆதிதாளம்

பல்லவி

          யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும்.

அனுபல்லவி

                        தேசுறு[1] பரதல[2] வாசப் பிரகாசனே
                        ஜீவனே, அமரர் பாவனே[3] மகத்துவ. - யேசு

சரணங்கள்

1.         இந்த உலகு சுவை தந்து போராடுதே,
            எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
            தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
            சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. - யேசு

2.         நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
            நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
            தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
            தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். - யேசு

3.         கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
            கேடு பாடுகள் யாவையும் தீரும்;
            பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
            பொன்னு லோகமதில் என்னையே சேரும். - யேசு

- சவரிமுத்து உபாத்தியாயர்


[1] ஒளிவீசும்
[2] பரலோகம்
[3] மகானுபாவனே

Comments

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு