24 January 2019

ஆவியை அருளுமே சுவாமீ

கி.கீ:117

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியை அருளுமே

 

117. (136) காபி                                             ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                   ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்

                        காயுயிர் கொடுத்த வானத்தினரசே!

 

                             சரணங்கள்

 

1.         பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,

            பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,

            தேவ சமாதானம், நற்குணம், தயவு,

            திட விசுவாசம் சிறிதெனுமில்லை. - ஆவியை

 

2.         தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;

            திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,

            பாவ அசூசங்கள்[1] விலக்கியே மாற்றும்,

            பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும். - ஆவியை

 

3.         நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?

            நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?

            முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?

            முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? - ஆவியை

 

 

- அருளானந்தம்



[1] அழுக்கு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...