ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும்


ஏசு மகாராசனுக்கு ஜே

102. புன்னாகவராளி                              ஆதி தாளம்

பல்லவி

                        ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே!

அனுபல்லவி

            மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே, ஜே!

சரணங்கள்

1.         சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர்,
            கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார்.

2.         மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே,
            பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார்.

3.         காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச்
            சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார்.

4.         சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே,
            மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே.

5.         ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்
            ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே.

6.         ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆவேனே,
            தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்.

­- ஜி.ச. வில்லியம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு