உந்தன் ஆவியே சுவாமி
உந்தன் ஆவியே வந்து சேரவே
112. (129) நாதநாமக்கிரியை ரூபக தாளம்
பல்லவி
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே, அருள் தந்து
காவுமே.
சரணங்கள்
1. முந்துமானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே. - உந்தன்
2. மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே,[1]
அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே; -
உந்தன்
3. சத்ய ஆவியைச் சீடர்க் கித்தரை விட,
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே. - உந்தன்
4. பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே, -
உந்தன்
5. தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே[2]
வாச மாகவே அருள், நேச தேவனே. - உந்தன்
-
சவரிமுத்து உபாத்தியார்
Comments
Post a Comment