நெஞ்சமே கெத்சமேனக்கு


நெஞ்சமே கெத்சேமனேக்கு

63.

கண்ணிகள்

1.       நெஞ்சமே, கெத்சமேனக்கு நீ நடந்து வந்திடாயோ?
            சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்.

2.         ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்
            தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார்.

3.         தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
            ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே.

4.         அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
            எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே.

5.         ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே,
            குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ?

6.         வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
            தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்.

7.         தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
            ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்.

-ஐ.ஏ. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு