பல்லவி
ஆர்ப்பரிப்போம்! ஆரவாரிப்போம்!!
மீட்பர்
இயேசு வருகின்றாரே - இன்று - ஆர்ப்
அனுபல்லவி
பூரிப்பான எக்காளங்கள் பூமியின் மேலே முழங்கிடுதே
- இன்று - ஆர்ப்
1. புத்தியுள்ள
கன்னியர் போல்
முத்தியை
நோக்கி நடந்திடுவோம்
சத்தம்
கேட்கும் காலம் வரும்
நித்திய
வீட்டுக்குள் நுழைத்திடு வோம் - இன்று - ஆர்ப்
2. யுத்தம்
வரும் சத்தம் வரும்
நித்தம்
நிலமும் நடுங்கிடுமே
பக்தியற்
றோரை பிரித் திடுவார்
நித்திய
அக்கினியில் அழித்திடுவார் - இன்று - ஆர்ப்
3. அந்தியிலோ
பிறசந்தியிலோ
முந்திய
நடுசாமத்திலோ
வந்திடுவார்
உனைசந்தித்திடுவார்
பிந்திடாமல்
பின் சென்றிடுவோம் - இன்று - ஆர்ப்
- எம்.ஏ. அழகுசுந்தரம்
No comments:
Post a Comment