31 March 2026

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

நிஜீ.கீதங்கள்:248

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

                        அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

                        ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்

                        அன்பினால் இன்று அலங்கரியும்...

 

1.         ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே

            துதிக்கத் துண்டும் துணையாளரே

            சாத்தானின் சகல தந்திரங்களை

            தகர்த்தெறிய வாரும் ஜயா - ஆட்கொண்டு

 

2.         சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை

            உயிர் பெறச் செய்பவரே

            சரீரங்களின் தீய செயல்களையே

            சாகடிக்க வாருமையா

 

3.         பெலன் இல்லாத நேசங்களில்

            உதவிடும் துணையாளரே

            சொல்லொண்ணா பெருமூச்சோடு

            ஜெபித்திட வாருமையா

 

4.         மனதை புதிதாக்கும் மன்னவனே

            மறுரூபமாக்குமையா

            ராஜாவின் இரண்டாம் வருகைக்காக

            எந்நாளும் ஏங்கச் செய்யும் - இயேசு

 

5.         தேவாதி தேவனின் ஆழங்களை

            ஆராய்ந்து அறிபவரே

            அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி

            எப்போதும் நடத்தும் ஐயா

 

6.         பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை

            கண்டித்து உணர்த்தும் ஐயா

            பரிபூரண உம் சத்தியத்திற்குள்

            பக்தர்களை நடத்தும் ஐயா

                        வரவேண்டும் தேவ ஆவியே

                        எங்கள் மத்தியிலே

                        வரவேண்டும் தேவ ஆவியே

                        எங்கள் உள்ளத்திலே

            ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும்

            அனல் மூட்டுமையா அனல் மூட்டும்

 

                        தூய ஆவியே அன்பின் ஆவியே

                        துணையாளரே தேற்றும் தெய்வமே

                        ஊற்றுத் தண்ணீரே

                        உள்ளம் ஏங்குதையா

 

                                    வரவேண்டும் வல்லவரே

                                    வரவேண்டும் நல்லவரே

 

 

- பெர்க்மான்ஸ்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...