27 March 2026

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

நிஜீ.கீதங்கள்:1705

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

                        இயேசு நீர் மாத்திரமே

                        முழு உலகத்திற்கும் பொதுவான தெய்வம்

                        இயேசு நீர் மாத்திரமே - 2

 

1.         அன்பு என்றால் என்ன என்று சொல்லித் தந்த தெய்வம்

            இயேசு நீர் மாத்திரமே

            பெரும்பாவி மனம் மாற ஏங்குகின்ற தெய்வம்

            இயேசு நீர் மாத்திரமே - 2

                        தம்மை நம்பி வருபவர்கள்

                        எந்த மதத்து மனிதராயினும்

                        ஏற்றுக்கொள்ளும் பாசத் தெய்வமே - 2 - ஆராதனைக்கு

 

2.         பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வம்

            இயேசு நீர் மாத்திரமே

            பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம்

            இயேசு நீர் மாத்திரமே - 2

                        பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற

                        தெய்வம் நீர் மாத்திரமே - 2 - ஆராதனைக்கு

 

3.         சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு உரியவர்

            இயேசு நீர் மாத்திரமே

            பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம்

            இயேசு நீர் மாத்திரமே - 2

                        பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த

                        தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே - 2 - ஆராதனைக்கு

 

4.         ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற

            வேறுபாட்டை வென்ற தெய்வமே

            மனித நேயமில்லாத மதவாத உலகத்துக்கு

            மனிதநேயம் சொல்லித் தந்தவரே - 2

                        சமத்துவம் சமதர்மம் உலகத்தில் நிலைநாட்ட

                        உயிரைத் தந்த உண்மை தெய்வமே - 2 - ஆராதனைக்கு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...