27 March 2026

ஆராதிப்பேன் ஆண்டவரை ஆவியோடும்

நிஜீ.கீதங்கள்:1166

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதிப்பேன் ஆண்டவரை

                        ஆவியோடும் உண்மையோடும்

                        மாறாத ஆனந்தம் குன்றாத பேரின்பம்

                        இயேசுவில் என்றும் உண்டு

                        நேசரண்டை வாருங்கள்

                        நேசத்தை ருசியுங்கள்

                        ஆவலாய் அழைக்கிறார் இதோ

 

1.         ஆகாமியக் கூடாரம் வேண்டாம்

            ஆலய வாசற்படியிலே

            ஆனந்தம் பாடி நேசரைத் தேடி

            ஆண்டவர் பாதம் பணிவோம்

 

2.         ஆலோசனைக் கர்த்தர் அவரே

            ஆலோசனை தந்திடுவாரே

            பாதையைக் காட்டி கரம் பிடித்து

            நேர் வழி நடத்திடுவார்

 

3.         ஆட்டுக்குட்டி திரு ரத்தமே

            பாவமற கழுவிடுமே

            பாவங்கள் போக்கி சாபங்கள் மாற்றி

            பரலோகம் சேர்த்திடுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...