ஆளுகை
செய்வேன் என் இயேசுவோடு
ஆச்சரியமான வலது பக்கத்தில் - 2
உன்னதத்தில் உயர் ஸ்தலதில்
அமர்ந்திருப்பேன் என் நேசருடனே - 2
ஜெயங்கொண்டு வல்லமையாய்
ஆளுகை செய்வேன் - (3)
1. துரைத்தனங்கள் அதிகாரங்கள்
எந்தனின் கால்களின் கீழே - 2
அந்தகார வல்லமைகள் முறியடிப்பேன் -
(2)
என்றும் ஜெயித்திடுவேன் - (2) - ஜெயங்கொண்டு
2. கல்வாரி வெற்றி செயல்படுத்தி
சாத்தானை தோற்கடிப்பேன் - 2
சர்ப்பங்களை சிங்கங்களை மிதித்திடுவேன்
- (2)
இயேசுவின் நாமத்தினால் - என் - (2) - ஜெயங்கொண்டு
3. சேனை அதிபன் முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார் - 2
விசுவாச கேடகத்தை பிடித்துமே நாம் -
(2)
முன் நோக்கியே முன் செல்வேன் - (2) - ஜெயங்கொண்டு
4. இவ்வுலகத்தின் பாடுகளெல்லாம்
சீக்கிரம் மறைந்திடும் - 2
கவலையில்லை கண்ணீருமில்லையே - (2)
நேசரின் முகம் காணுவேன் - (2) - ஜெயங்கொண்டு
No comments:
Post a Comment