31 March 2026

ஆவியின் அனல் கொண்டு ஆனந்திக்க

நிஜீ.கீதங்கள்:1190

To Download Txt Lyrics file

 

          ஆவியின் அனல் கொண்டு ஆனந்திக்க

            ஆத்தும நேசரே வந்திடுமே

            நேசத்தை என்மீது பொழிந்திடவே

            பின்மாரி மழையினை ஊற்றிடுமே

 

                        நிரப்பட்டும் நிரப்பட்டும் தூய ஆவியே

                        பரவட்டும் பரவட்டும் தேவ நதியே

 

2.         இயேசுவின் நேசத்தால் நிரப்பப்பட

            கல்வாரி தரிசனம் தந்திடுமே

            மண்பாண்ட பொக்கிஷம் நிறைந்திடவே

            உன்னத ஆவியை ஊற்றிடுமே

            ஊற்றட்டும் ஊற்றட்டும் பின் மாரியே

            தேசமெல்லாம் கரை புரண்டோடட்டுமே

 

3.         தாவீதைப் போல ஆடிப்பாடி துள்ளிடவே

            தெய்வீக அக்கினி ஊற்றிடுமே

            தீப்பிடித்து தேசமெங்கும் பரவிடவே

            பரலோக வல்லமை ஊற்றிடுமே

            பரவட்டும் பரவட்டும் வாய்க்காலெல்லாம்

            கர்த்தரே தேவனென்று அறியட்டுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...