27 March 2026

ஆர்த்தெழும்பு ஆர்த்தெழும்பு தேவ ஜனங்களே

நிஜீ.கீதங்கள்:2277

To Download Txt Lyrics file

 

                   ஆர்த்தெழும்பு ஆர்த்தெழும்பு தேவ ஜனங்களே

                        ஆண்டவரின் வார்த்தைகளில் அக மகிழ்ந்திடு

                        விழித்தெழும்பு விழித்தெழும்பு விண்ணப்பம் பண்ணு

                        வாக்குத்தத்தம் சொந்தமாகும் நிச்சயம் நம்பு

 

1.         விசுவாசம் ஆபிரகாமின் சுவாசமானது

            தளர்ந்த அவன் உடலில் அது உயிரானது

            விண் மீன்களைக் கண்ட போது விதையானது

            மண்ணின் துகளிலும் அது மழலையானது

 

2.         பாரெங்கும் செல்லுவோம்

            சீடராக்குவோம் பரிசுத்தமான

            ஜீவ பலியாகுவோம்

            பாடுகளின் மத்தியிலும் பெருகும் மந்தையாம்

            திருச்சபைகள் தேசமெங்கும் திரளாக்குவோம்

 

3.         தேவ வார்த்தை ஊழியத்தின் மூலதனமாம்

            விசுவாசம், கீழ்படிதல் ஜெபம் தேவையாம்

            பரிசுத்தமான தியாக தீபங்களாக

            எளிய வாழ்வை இறுதி வரை

            காத்துக் கொள்ளுவோம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...