27 March 2026

ஆராதனை நாயகன் நீரே

நிஜீ.கீதங்கள்:88

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை நாயகன் நீரே

                        ஆராதனை வேந்தனும் நீரே

                        ஆயுள் முடியும் வரை

                        உம்மை தொழுதிடுவேன்

 

                             சரணங்கள்

 

1.         ஆயிரம் பேர்களில் சிறந்தோர்

            ஆண்டவர் இயேசு நீரே

            விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே

            என்றென்றும் தொழுதிடுவேன் - ஆராதனை

 

2.         மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்

            மகிமையின் தேவன் நீரே

            முழங்கால் யாவுமே முடங்கிடுமே

            மகிழ்வுடன் துதித்திடவே - ஆராதனை

 

3.         முடிவில்லா ராஜ்ஜியம் அருள

            திரும்பவும் வருவேன் என்றீர்

            ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே

            அனுதினம் வணங்கிடுவேன் - ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...