2609 F-Min/6/8/T-90 4
ஆவலாய்
இருக்கின்றார் கருணை காட்ட
அன்பு
கரம் அசைத்து ஓடி வருகின்றார் - 2
நீதி
செய்பவர் இரக்கம் உள்ளவர்
மனதுருகும்படி
காத்திருப்பவர் - 2
1. சீயோன்
மக்களே எருசலேம் குடிகளே
இனி
ஒரு போதும் அழமாட்டீர்கள் - 2
கூப்பிடும்
குரலுக்கு செவிசாய்க்கின்றார்
கேட்ட
உடனேயே பதில் தருகின்றார் - 2 - நீதி
2. இன்னல்கள்
துன்பங்கள் மிகுந்த உலகிலே
உன்னதர்
வாக்களித்த வார்த்தை உண்டு - 2
எண்ணி
முடியாத அதிசயங்கள்
கண்களால்
காண்பீர்கள் அதி சீக்கிரத்தில் - 2 - நீதி
3. வலப்புறம்
இடப்புறம் சாய்ந்து போனாலும்
வழி
தவறி நாம் நடந்து சென்றாலும் - 2
இது
தான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
என்ற
சப்தம் நம் இதயத்திலே ஒலிக்கும் - 2 - நீதி
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment