ஆராதனையிலே
அக்கினி ஸ்தம்பங்கள்
ஆராதனையிலே மேக ஸ்தம்பங்கள் - 2
பார்வோனின் ரதங்கள் என்னை
என்ன செய்திடும்
செங்கடல் செங்கோலும் தோற்று
போய்விடும்
தேவன் தரும் இரட்சிப்பை நின்று
பார்க்கின்றேன்
கர்த்தர் தந்த கோலோடு கடந்து
செல்கின்றேன்
கர்த்தாவே உமக்கு ஒப்பாய்
யாருமில்லையே
தேவர்களில் உமக்கு ஒப்பாய்
ஒருவர் இல்லையே - 2
1. பூமியின் குடிகளே ஆராதிக்க வாருங்கள்
கர்த்தரை தெய்வம் என்று ஆராதனை செய்யுங்கள்
கூடார வாசலுக்கு ஆராதிக்க வாருங்கள்
ஆவியில் நிறைந்து பிராத்தனை செய்யுங்கள்
- 2 - பார்வோனின்
2. ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
உள்ளத்தாலே கர்த்தரை ஸ்தோத்தரி
உபகாரங்களை என்றும் மறவாமல்
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி ஸ்தோத்தரி
- 2 - பார்வோனின்
No comments:
Post a Comment