27 March 2026

ஆராதனை வேளையில் ஆராதிப்போம்

நிஜீ.கீதங்கள்:73

To Download Txt Lyrics file

 

1.       ஆராதனை வேளையில்

            ஆராதிப்போம் தேவனை

            கர்த்தரை அகிலம் படைத்தவரை

            காத்து நம்மை ஆள்பவரை

            ஏந்தி சுமந்திடும் நித்தியரை

            பணிவுடன் ஆராதிப்போம்.

 

2.         ஆராதனை வேளையில்

            ஆராதிப்போம் இயேசுவை

            அன்பராய் நல்ல நண்பராய்

            மீட்பராய் நல் மேய்ப்பராய்

            ஜீவனைத் தந்த நம் இரட்சகரை

            உண்மையாய் ஆராதிப்போம்

 

3.         ஆராதனை வேளையில்

            நல்லாவியை ஆராதிப்போம்

            உயிர்தெழுதலின் வல்லமையை

            உயிர்ப்பிக்கும் ஆற்றல் உள்ளவரை

            கடைசி மட்டும் துணை நிற்பவரை

            மகிழ்வுடன் ஆராதிப்போம்

 

4.         ஆராதனை வேளையில்

            திரியேகராம் கர்த்தரையே

            மூவரில் ஒருவராய் உள்ளவரை

            ஒருவரில் மூவராய் இருப்பவரை

            நம் அனைவரின் துதிகளை

            ஏற்பவரை பயத்துடன் பணிந்திடுவோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...