31 March 2026

ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே

நிஜீ.கீதங்கள்:242

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே

                        எல்லா ஆவியின் வரங்களோடு

                        பலமாய் இங்கு இறங்கும் இன்று

 

1.         வானங்கள் இன்று திறக்கட்டுமே

            அபிஷேக மழையே பெய்யட்டுமே

            உன்னத ஆவியே ஊற்றிடுமே

            மறுரூபமாய் என்னை மாற்றிடுமே

 

2.         பெந்தேகோஸ்தே நாளின் அனுபவங்கள்

            அப்படியே இன்று நடக்கட்டுமே

            பலத்த காற்றின் முழக்கம் பொல்

            ஒரு வல்லமை இங்கு வீசட்டுமே

 

3.         அக்கினி மயமான நாவுகள்

            எங்கள் மேல் வந்து அமரட்டுமே

            ஆவியின் வரங்கள் யாவையுமே

            வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே

 

4.         கண்ணீர் கவலைகள் மறையணுமே

            கட்டுகள் யாவும் உடையணுமே

            அற்புதம் அதிசயம் நடக்கணுமே - நீர்

            யார் என்று ஜனம் அறியணுமே

 

5.         பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே

            சாட்சிகளாய் எங்கும் வாழணுமே

            எங்கள் சித்தம் மறையணுமே

            தேவசித்தம் நிறைவேறணுமே

 

 

- S.J.C. Selvakumar

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...