31 March 2026

ஆறுதல் அடை மனமே கிறிஸ்துவுக்குள்

ஞா.கீ:339

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

339. இராகம்: துஜாவந்தி                                 ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள்

            ஆறுதல் அடை, மனமே.

 

                             அனுபல்லவி

 

            பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்

            கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. - ஆறு

 

                             சரணங்கள்

 

1.         நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக

            நலிவதேன் ஒருக்காலே;

            உம்பர்[1] கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ

            துயிர்த்தெழும்புவ தாலே,

            வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும்

            தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. - ஆறு

 

2.         ஏசு வருவார்; வானத்தில்-தேவதூதர்கள்

            எக்காளம் ஊதும் நேரத்தில்

            காசிதனில் ஏசுவில்-மரித்தோர் எல்லாம்

            கதித்துயிராகி மேகத்தில்

            மாசறச் செல்ல, நாமும் மறு ரூபமாகிச் சென்று

            சாசுவதமாய் என்றும் தற்பரனுடன் வாழ்வோம் - ஆறு

 

3.         ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில்

            திரளாய் ஜனங்கள் கூடுமே;

            தேவ துதியைப் பாடுமே;-ஏசுகிறிஸ்தின்

            ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே;

            ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு

            ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக. - ஆறு

 

 

- மரியான் உபதேசியார்



[1] வானோர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...