31 March 2026

ஆளில்லை ஆளில்லை அழுது

நிஜீ.கீதங்கள்:259

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆளில்லை ஆளில்லை

                        அழுது ஜெபிக்க ஆளில்லை - 2

                        செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்

                        கண்ணீர் சிந்த ஆளில்லை - 2

 

1.         சின்னஞ் சிறுவரை சித்ரவதை செய்து

            வதைக்கும் கூட்டம் உண்டு - 2

            கதறி துடிக்கும் பாலகர்க்காக

            கண்ணீர் வடிக்க ஆளில்லை - 2 - ஆளில்லை

 

2.         குடித்து வெறித்து அடித்து உதைக்கும்

            கொடூர கூட்டம் உண்டு - 2

            அழுதே வாழ்வை கழிப்போர்க்காக

            அழுது புலம்ப ஆளில்லை - 2 - ஆளில்லை

 

3.         தேவன் வருவார் கணக்கு கேட்பார்

            எப்படி ஜெபித்தாய் என்பார் - 2

            என்ன சொல்ல எப்படி சொல்ல

            தலை குனிவோர் ஏராளம் - 2 - ஆளில்லை

 

 

- Eva. Michael Paul (Light of Truth Ministries)

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...