வருவார் வருவார் என்றன் மனதைத் தேற்றிடுகின்ற
102. சகரனா ரூபக
தாளம் (86)
இராகம் (ஐயா
தெய்வமே இந்த)
பல்லவி
வருவார் வருவார் என்றன் மனதைத் தேற்றிடுகின்ற
வாக்கியம்
எனது பாக்கியம்
அனுபல்லவி
திருவார்
சகிமாரெல்லாம் சீயோன் மகனென்னோடு
தினமு
முன்னோடிருக்க அனவாதம் சுகிக்க
1. கண்ணின்
கருவிழிபோல் என்னைக் காத்தவா திருக்கரத்தில் பதித்த காதலன்
எண்ணிமுடியாதெனின்
ஏதமகற்றி நலம்ஈயும் சம்பன்னமாதலன்
விண்ணிலிருந்து
தாழ வெகு கோடி சுரர்சூழ
மேகவாகன
மேறி தோகை மேலவர் மீறி -
வருவார்
2. மறவேன்
மறவேன் என்னை மறந்தால் தன் வலதுகை
மறக்குமென்றாணை
விண்டவன்
தருவேன்
தருவேன் ஜீவதண்ணீர் தந்துனின் தாகம்
தணிப்பேன்
என்றெனைக் கொண்டவன்
மறலியைச்
சிறைகொள்ள மகராஜன் தனைக்கொண்ட
விரைந்து
தூதுபோய் வந்து விண்ணவருரை தந்து -
வருவார்
3. கனவோ
நினைவோ என்ன காரணமோ அறியேன் காணுது அவர் காட்சி
தினமும்
என் மனமந்தச் சீரானன் தனை நோக்கி செல்லுவது என்ன சூட்சி
எனதுயிர்க்குயிரான
இறைவர்க்கிறைவரான
இகபரமும்
துதிசெய் இம்மானுவேல் மணியை -
வருவார்
Comments
Post a Comment