26 May 2018

மாட்சிமிகும் மோட்சநகர் மகிமை என் சொல்வேன் - அந்த


117. செஞ்சுருட்டி                  ஆதி தாளம் (98)

 

1.       மாட்சிமிகும் மோட்சநகர் மகிமை என் சொல்வேன் - அந்த

            மங்களம்சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்

2.         பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப்பொன்னாமே - அங்கு
            பாடுவோரும் ஆடுவோரும் கோடாகோடியே

3.         முத்துமயமாயிலங்கும் பட்டணமது - நமது
            முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது

4.         ஜீவநதி பாயுகின்ற பட்டணமது - நிதம்
            சித்திரமுடனிலங்கும் பட்டணமது

5.         நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது - நமது
            நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது

6.         சாவுதுக்க மேயில்லாத பட்டணமது - நிதம்
            சங்கீதமுடனிலங்கும் பட்டணமது

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...