இன்னம் வரக்காணேனடி ஏதோ தடை தூதுபோடி


95. இராகம் (பாவவினை நீக்குமையா)             (79)

பல்லவி

          இன்னம் வரக்காணேனடி ஏதோ தடை தூதுபோடி

அனுபல்லவி

                        பொன்னகருக்கெழுந்து சென்ற
                        புகழ் நாசரேத்தையர் மன்றல்

1.         தந்தை தமதொரு மகவைத் தாரணியிந் போய்வரவே
            சிந்தை மகிழ்ந்துரைக்கலையொ தெரிந்துவாடி என் புறாவே

2.         சீக்கிரமாய் வாறேனென்று செப்பிய சொல் மறந்திருக்க
            போக்கெதுவு முண்டோ கேட்டுபுகலடி என் மனதுமெய்க்க

3.         சீக்கிரம் சொல் ஒலிவகிரிதேவசுதன் போனவழி
            நோக்கிலது சுருக்கவழி நொடிக்குள் போகலாமே தோழி

4.         ஆபரணமணிந்திருக்க ஆசையுள்ளம் மகிழ்ந்திருக்க
            கோபமேதோ தெரிகிலேன் போய் கூட்டிவாடி சேர்ந்திருக்க

5.         வந்தெனது கதவும் தட்டி பாசமாய் ரவாசஞ் செய்ய
            எந்த நேரம் வருகிறரோ இன்சொல்லுடன் கேட்டு வாடி

6.         பொற்பரமலோகம் விட்டு புகழ்பெற மங்களமுடிக்க
            சற்குணரும் தேடுவதாய் சாற்றடிபோய் சகியே மானே     

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு