கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும் - ஜோதி
77. செஞ்சுருட்டி ரூபக சாப்புத்தாளம் (62)
பல்லவி
கல்வாரி
மலையோரம் வாரும் பாவம் தீரும் - ஜோதி
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்கினாரே - ஜோதி
சரணங்கள்
1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப்பட வைக்க ஐயன் மேலுருண்டு
தாகத்தினால் வாடிக்கருகியே சுருண்டு
சடலமெல்லாம் உதிரப்பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது நாதா ஜீவநாதா -
ஜோதி
2. பொன்முடி மன்னனுக்கு முண்முடியாச்சே
உபகாரம் பரிகாரம் சிதையவுமாச்சே
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சே
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சே
மேசையனப்பன் கோபம் மேலே இதற்குமேலே - ஜோதி
3. மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கவுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டது மேனோ
தளர்ந்திடாத கரங்கள் துவண்டதுமேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர் நம்மால்தானே நம்மால்தானே - ஜோதி
Comments
Post a Comment