30 May 2018

பாவி ஓடிவா உன் பாவப்பாரம் தாங்க ஏசு


132. இராகம் இங்கிலீஷ்        (112)

பல்லவி

                   பாவி ஓடிவா உன் பாவப்பாரம் தாங்க ஏசு
                   பார்த்து நிற்கிறார் பரிதபித்து நிற்கிறார்

1.         தாமதமென்ன, உன் சுவாமி ஏசு நாதரழைக்கும் சத்தம் கேளாயோ
            அவர் தஞ்சம் தேடாயோ

2.         பின்னிடாதே நீ, உன் தன்மை இன்னதென்று அவர் முன்னறிவாரே
            தம் நன்மை ஈவாரே

3.         காலம் போகுது, மாய் மாலம் செய்து வஞ்சியாமல் மந்தை சேர்ந்துகொள்
            கிறிஸ்தன்பை சார்ந்துகொள்

4.         தேவபாலனாம், இம்மானுவேலரே உன் காவல் தேவை வேறென்ன
            உனதாவல் வேறென்ன

5.         சுத்தஜோதியே தம் ரத்தத்தாலே உன்னை மீட்க சித்தம் கொண்டிட்டார்
            ஆ! சிலுவை தொங்கிட்டார்

6.         நொந்த பாவியே, இவ்வந்தகார லோகந்தனில் தொந்தரை மெய்யே
            பல நிந்தைகள் மெய்யே

7.         ஜீவ அப்பம் நான் நீ தின்று மகிழ்கொண்டு ஜீவன் கண்டடை என்றார்
            எனைவந்தடை யென்றார்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...