ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ
157. செஞ்சுருட்டி ஆதி
தாளம் (185)
இராகம் (ஏசுநேசா வாரும்)
பல்லவி
ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ
1. தேசிக
மேலோகமதில் தேவதிருப்பாதமதில்
செல்ல
வல்ல வெல்ல நல்ல - ஆசீர்வாதம்
2. கண்மணிபோலன்புடனே
காண்பி தயை நண்புடனே
காவா
மூவா தேவா வாவா - ஆசீர்வாதம்
3. அத்தனுனின்
பாடுகளை அன்புடனே சிந்தை செய்ய
ஆசையுள்ள
ஆவல்கொள்ள - ஆசீர்வாதம்
4. பன்னிரண்டு
சீஷருக்கும் பரிசுத்தாவி கொடுத்த தேவா
பத்தா
கர்த்தா நித்தா வாவா - ஆசீர்வாதம்
5. ஆலயந்தனிலுமது
வசனமதைப் போதிக்கின்ற
போதகர்
அனைவருக்கும் - ஆசீர்வாதம்
6. பத்தமுடன்
கூடி சுவிசேடமலர் சூடிக்கவி
பாட
ஆட தேட நாட - ஆசீர்வாதம்
7. பூரண
விசுவாச ஜெபம் பூததயை தியான தவம்
புரிய
அரிய வரிய பெரிய - ஆசீர்வாதம்
8. தாதாவே
தாள் பணியும் தானடியேன் ஞானமணி
தாசனுக்கு
சீஷருக்க - ஆசீர்வாதம்
Comments
Post a Comment