தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்
170.
பல்லவி
தற்பரனே
எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்
அனுபல்லவி
மெய்ப்பரன் புல் தரையில் என்னை
மேய்த்துக் காப்பாரே - மகா
1. ஊற்றின் சுத்த தண்ணீரண்டை சேர்த்திடுவாரே
- என
தாத்துமத்தின் தாகமெல்லாம் அமரச் செய்வாரே
2. தம்நாம நிமித்தமெனில் தயவுவைப்பாரே - வெகு
செம்மையுள்ள வழியிலென்கால் செல்லச்செய்வாரே
3. மரணநிழல் பள்ளத்தில் நான் வழி நடந்தாலும்
- என்னை
பரன் காப்பார் மோசத்துக்கு பயப்பட்டஞ்சேனே
4. எனது துணையாகவிருந்தென்னைக் காப்பாரே - ஆமாம்
தமது தண்டக்கோலாலென்னைத் தாங்கியாற்றுவாரே
5. என் தலையிலபிஷேக மிதமாய் செய்தாரே - எனின்
சந்தோஷபாத்திரம் நிரப்பி சௌக்கியம் பெற்றேனே
6. தேவ நம்மை கிருபையென்றசெல்வ பாக்கியங்கள்
- எந்தன்
ஜீவனுள்ள நாளிலெல்லாம் சேர்த்துச் செல்லுவாரே
7. கர்த்தருட நல்வீட்டில் காதலுடனே - நான்
நித்த நித்த காலமெல்லாம் நிலைத்திருப்பேனே
Comments
Post a Comment