நித்தியானந்தத்தை நாடு - பர


130. தேசிககாபி       ஆதி தாளம்   (110)

பல்லவி

                   நித்தியானந்தத்தை நாடு - பர
                   நின்மலசுகம் தேடு - ஓ மனமே              - நித்தி

அனுபல்லவி

                        சத்தியமார்க்கம் தன்னிலே கூடு
                        சற்சனர் சங்கத்துடனுறவாடு                 - நித்தி

1.         இந்திரஜாலம் உலகவைபோகம்; இன்றைக்கிருப்பதுவோ சந்தேகம்
            அந்தரமின்னல் போலழியுமித்தேகம் ஐயோ அதனுடன் உனக்கென்ன சிநேகம் - நித்தி

2.         தனதானிய முதலான சம்பத்து சாஸ்வதமோ அதற்காயிரம் தந்து
            தினமுங்கவலையை விளைத்திடும் வித்து சீச்சி அதனை விரும்பல் விபத்து   - நித்தி

3.         மெய்யே ஒன்றுக்கும் உதவாப்பண்டம் மிருகாதிகள் சூழ்மாமிச கண்டம்
            பொய்யோ இதற்கிங்கு நித்யகண்டம் புண்யஞ் செய்யும் உனக்காயிரம் தண்டம்   - நித்தி

4.         காண்பதெல்லாம் நிலையல்ல அநித்தியம், காயம் இறந்திட வேணுமகத்தியம்
            வீண்பொருள் மீது உனக்கென்ன பைத்தியம் வேதநாயகன் சொல்வதே சத்தியம் - நித்தி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு