25 May 2018

வாகனப்பவனி கொண்டார் முகில்மேலே - ஏசு


93. இராகம் (நேசமே எழுந்து ஏசுராஜனை)                          

பல்லவி

                   வாகனப்பவனி கொண்டார் முகில்மேலே - ஏசு

1.         தேகமிசை ஐந்துவடு சிறந்திலங்க
            சீடர்கள் குன்றின்மேல் நின்று சிந்தை கலங்க

2.         வாழ்த்தி வரம் வாங்கிச்சீடர் பார்த்து நிற்கவே
            வஞ்சகப் பேய் அருண்டு பஞ்சாய் பறக்கவே

3.         தாளங்களிட்டுப் பெருமெக்காளங்கள் தொட்டு
            சம்மனசோர்கள் வீணையில் சங்கீதம் கொட்ட

4.         தூதர் எதிர் கொண்டு சீடர் சோபகமற்ற
            சோமனருணன் உடுக்கள் மண்டலந்தாண்டி

5.         வல்லமைப் பிதா மகவை வந்தழைக்கவே
            வாசலுயரப் பரலோகம் செழிக்கவே

6.         ஜாதிகளெல்லாரும் மோட்சவீடு தரவே
            சற்குண தாசன் மேல் சுத்த ஆவி வரவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...