18 May 2018

முடிந்ததென்றீரோ ஐயா


68. செஞ்சுருட்டி                         ரூபக தாளம் (59)

6-ம் வார்த்தை

பல்லவி

                   முடிந்ததென்றீரோ ஐயா
                        முன்னாள் வினையான தெல்லாம்

சரணங்கள்

1.         தேவப்பிதா சித்தமதைத் திட்டமாகவே
            செய்து நிறைவேற்றி இப்போ சிலுவை மீதேறி நின்று    

2.         பூரணரான ஏசு புண்ணியக்கிரியை
            பூர்த்தியாய் செய்து இப்போ பூமி விட்டேகுமுன்னே

3.         வேண்டிய பாடனைத்தும் வேதனே தீரும்
            தாண்டியே உத்தரித்து தாரணி விட்டேகுமுன்னே

4.         தேவ கற்பனைகளெல்லாம் திடமாகவே
            செய்தேன் மரணவாயில் செப்பவே இந்த வார்த்தை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...