பாவி நான் செய்த பாவம் தீர்க்க - இந்த
56. தன்யாசி ஆதி
தாளம் (47)
1. பாவி நான்
செய்த பாவம் தீர்க்க - இந்த
பாரிலொர் ஏழைரூபம் தேவன் எடுத்தாரே
2. காவிலே ஏவை செய்த பாவம் - இந்தக்
காசினியெல்லாம் பரவக்கண்டதே மாசாபம்
3. மேவியே தேவனுட கோபம் - தலை
மேற்சுமந்து தீர்க்க மடிந்தாரே பரிதாபம்
4. மோதியே ரத்தவேர்வை ஓட - காவில்
மும்முறை முழந்நாள் நின்று கெஞ்சியே மன்றாட
5. ஜாதியோர் மூர்க்சங்கொண்டு மைத்தேட-தஞ்ச
மென்று எண்ணியேயிருந்த சீஷர்முகம் வாட
6. மெய்யெல்லாம் புண்களாக நோக-சாலேம்
வீதிவழி ஏகுதே ஓர் ஆடெனக்காய் சாக
Comments
Post a Comment