தேவா பரகிறிஸ்து தேவா பரதேவா - பர


146.  இராகம் (இங்கிலீஷ்)             (126)

பல்லவி

                   தேவா பரகிறிஸ்து தேவா பரதேவா - பர
                   தேவா பரகிறிஸ்து தேவா பரதேவா

1.         ஜீவா தற்பர யோவா அற்புத சிந்தைப் பரநேசா - ஆகா
            மூவாளொத்த சொரூபா வாவா காவா நசரேசா கிறிஸ்து தேவா

2.         வானத்திறைவன் மேன்மைப்பரமன் சேனைத் திரளோனே - ஆகா
            பக்தரை உத்தம சித்தமிகுத்தே வைத்தாதரி நயமே

3.         நித்திய ஜீவன் நீயே பாதையும் நீயே சத்தியமும் - ஆகா
            ஆசைக்கண்ணாளா அன்பா தோழா நண்பா மணவாளா

4.         நித்தா ஞானப்பத்தா கர்த்தா நித்திய பரிசுத்தா - ஆகா
            அத்தா வேதத் தாசீர்வாதந்தாவா பரிசுத்தா

5.         மட்டில்லாத வானசேனையும் பூதல பாதாளரும் - ஆகா
            சிட்டும் பாடுது திருநெல்லைப்பதியாரும் பாடுகுறோம் கிறிஸ்துதேவா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு