அந்தோ சிலுவைப் பவனி பார் ஜோதி
69. (257)
சரணங்கள்
1. அந்தோ சிலுவைப்
பவனி பார் ஜோதி
ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ
நான் அழுதாலுந்தான் தீருமோ
குருசன்றி மீட்பு ஒப்பேறுமா - சகி, சகி
2. தோளில் பாரம் அழுத்தவே - அவர்
தொய்ந்து கீழே விழுகிறார் - ஐயோ
தூக்கிவிடுவாரில்லையோ - மாதா
என்னால் வந்த தொல்லையோ - சகி, சகி
3. தூக்கென்றவரை அதட்டுறான் - ஒரு
தோஷி முறுக்காய் பிதற்றுறான் - அங்கே
துடுக்காய் சவுக்கை சுழற்றுறான் - ஒருவன்
தொந்தரவு செல்தலட்டுறான் - சகி, சகி
4. மெள்ள ஏசு நடக்கிறார் - வேர்த்து
மெய்சோர்ந்து மிக சடைகிறார் - தம்மை
விருப்போடு பலியாய்ப் படைக்கிறார் - என்
அடைந்த பாவக்கடன் அடைகிறார் - சகி, சகி
5. மாதா ஏங்கித் தேம்கினாள் - நன்மை
வாங்கினோர் புலம்பி ஏங்குறார் - சீமோன்
மனம் சோர்ந்து குருசை தாங்குறான் - ஐயோ
மறுகி யோவான் முகம் வீங்குறான் - சகி,
சகி
6. சோலையில் வந்த பாவத்தால் - இதோ
சாலைவழியே போகிறார் - அலங்
கோலமாகி என்னால் சாகிறார் - தேவ
கோபாக்கினையில் வேகிறார் - சகி, சகி
7. கல்வாரி மலையில் ஏறுகிறார் - மிக
கருகி அன்னம் பருகிறார்- துயர்
காதல் மறுகியே சாகிறார் - பின்னும்
காருண்ய மொழிகள் கூறுகிறார் - சகி, சகி
8. பாறை சூடோ எரிக்குதே - திரு
பாதம் நெய்யாய் பொழியுதே - வான
பரனார் கிளைகள் தெரிக்குதே - கண்டு
பரதேசி ரத்னம் கண் கரிக்குதே - சகி, சகி
Comments
Post a Comment