நமது மணவாளருக்கெதிர் கொண்டுபோவோம் வாரும்
98. இராகம் (இந்த குழந்தையை) (82)
பல்லவி
நமது மணவாளருக்கெதிர்
கொண்டுபோவோம் வாரும்
அனுபல்லவி
தமது மணவறைக்குள் வாழ்ந்து
சுகித்திருக்க - நமது
1. ஆட்டுக்குட்டியின் கலியாண விருந்தருந்த
அணையாத தீவட்டியும் குறையா எண்ணையுங்கொண்டு
-நமது
2. செங்கோல் கையிற் பிடித்து சிம்மாசனத்தில்
வாழும்
சங்கையதிபதியை கண்டு சந்தித்திடுவோம் - நமது
3. வெள்ளை அங்கி தரித்து வெள்ளோலை கைப்பிடித்து
செல்லநடை நடந்து சீக்கிரம் போவோம் வாரும்
- நமது
4. மனையாட்டி கைப்பிடிக்க மயங்கித்தியங்குகிறாள்
நினையாத நேரம்தனில் மணவாளன் வந்திடுவார் - நமது
5. தங்கக்கிரீடம் வைத்து தமது பத்ராசனத்தில்
இங்கிதமாக வாழும் இம்மானுவேலருக்கே - நமது
Comments
Post a Comment