அருவுருவே நரருருவாய்


58. சங்கராபரணம்                    ஆதி தாளம் (49)

1.       அருவுருவே நரருருவாய்
            என்னிமித்தம் இது தருணம் ஏன் வருத்தமாம் எனதேசுவே ஐயா - நீர்
            அவஸ்தையுறக் காரணமேன் ஆதிமொழியாலோ

2.         பொற்கிரீடம் அணி சிரசில் என்னிமித்தம்... ஐயா - நீர்
            போதநொறுங்குண்ட தேவை பொற்கொடி செய்வினையோ
           
3.         அருட்கரங்கள் இரண்டிலேயும் என்னிமித்தம் ஐயா - நீர்
            ஆணி அறையுண்ட தேவைஅறுத்த கனி வினையோ

4.         தீருவிலாவில் ஈட்டியினால் என்னிமித்தம்... ஐயா - நீர்
            திறக்கமனங்கொடதேனோ தேவனுரைதானொ

5.         பங்கையப் பூபாதமதில் என்னிமித்தம்... ஐயா - நீர்
            படுகாயமான தாதி பகர்ந்த மொழியாலோ

6.         சோரி சிந்தும் வேர்வையதலால் என்னிமித்தம் ஐயா - நீர்
            சோர்ந்து விழுந்ததென்ன சேரார் பவச்சுவமையோ

7.         துய்யதிருமேனி யெல்லாம் என்னிமித்தம் ... ஐயா - நீர்
            நொய்ய உழப்பட்டதென்ன துய்ய உரைப்படியோ

8.         வண்மையுடன் உடல்கிழிய என்னிமித்தம் ... ஐயா - நீர்
            வாரடிகள் பட்டதேனோ வஞ்சகி செய்வினையோ

9.         தேவனுமாய் மனுஷனுமாய் என்னிமித்தம் ... ஐயா - நீர்
            தேடிவந்த காரணமேன் தேவனுரைதானோ

10.       ஆவியிலே தேவனையாய் என்னிமித்தம் ... ஐயா - நீர்
            அழுது கெஞ்சும் காரணமேன் ஆதி மொழியாலோ

11.       கன்னியர்க்குள் நானோருபெண் என்னிமித்தம்... ஐயா - நீர்
            கஸ்தியுறக் காரணமேன் கருணையினாலோ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு