19 May 2018

அன்பே! அன்பே!! அன்பே!!

கைப்பிரதி:74

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

74.

 

பல்லவி

 

                        அன்பே! அன்பே!! அன்பே!!

                        ஆருயிர் உறவே

                        ஆனந்தம்! ஆனந்தமே!

 

சரணங்கள்

 

1.         ஒருநாள்ந் தயை கண்டேனையா

            அந்நாளென்னை வெறுத்தேனையா

            உம் தயை பெரிதையா - என்மேல்

            உம் தயை பெரிதையா                          - அன்பே!

 

2.         பரலோகத்தின் அருமைப் பொருளே

            நரலோகரிலன் பேனையா

            ஆழம் அறிவேனோ - அன்பின்

            ஆழம் அறிவேனோ                              - அன்பே!

 

3.         அலைந்தேன் பலநாள் உமையுமறியா

            மறந்தே திரிந்த துரோகியை

            அணைத்தீர் அன்பாலே - எனையும்

            அணைத்தீர் அன்பாலே                        - அன்பே!

 

4.         பூலோகத்தின் பொருளில் மகிமை

            அழியும் புல்லின் பூவைப்போல

            வாடாதே ஐயா - அன்பு

            வாடாதே ஐயா                                      - அன்பே!

 

5.         இப்பாரினில் உம் அன்பின் இனிமை

            இயம்பற் கியலாதாகில் யான்

            இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்

            இசைக்கவும் எளிதாமோ                      - அன்பே!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...