இன்னமும் வரதாமதமுமேனோ - உந்தன்


103. சங்கராபரணம்    ஆதி தாளம்        (86)

பல்லவி

          இன்னமும் வரதாமதமுமேனோ - உந்தன்
          இரக்கமும் காட்டத்தடைதானோ

அனுபல்லவி

          கண்ணின் விழிபோல என்னைக்காக்குமணி முத்தரசே-ரீ-ரீ
            கண்விழியாக் குஞ்சுகளை கருணையுடனே இருசர முடனணையும்
            கரமுடனணைத்த அருள் வரம் கொடுத்து
            பரகதி அளித்திட பட்சமிகுந்தவா                    -இன்னமும்

1.         ராஜ ஏசுராஜ பாலகனே-எந்த ராஜாவுக்கு மேலான ராஜாவே - ஐயா
            இந்திர நீல ரத்தினம் பதித்த மகா ஈஸ்வரனே-ரீ-ரீ
            இந்தவேளை வந்துனது இரக்கமும் தயவும் பெருக்க மாயளித்து
            சுரமுடனணைத்து அருள்வரம் கொடுத்துப் பரகதி அளித்திட பட்சமிகுந்தவா
- இன்னமும்

2.         பூமியிலே நானோர் பரதேசி ஒரு புத்தியுமற்றலையுமாதோஷி - ஐயா
            சத்தியவழிதனிலே சார்ந்துநின்று உம்மைப்போற்ற-ரீ-ரீ
            தற்பரனே தக்கவகை தருவாய் வருவாய்தயா சுரமருள்வாய்
            தயாகரமனித்து அருள்வரம் கொடுத்து பரகதி அளித்திட பட்சமிகுந்தவா       
- இன்னமும்

3.         பொன்னகரை நோக்குமென்னைப்பாரும் - மகா புத்திபக்தி பூரணமாய் தாரும் - ஐயா
            தேவதூதரோடு நானும் சேர்ந்து நின்று உம்மைப் பாட-ரீ-ரீ
            தேவ வரம் கொண்டுவந்து தினமும் எந்தனைக் கரத்தா லணைத்திட
            சுரமுடனணைத்து அருள்வரம்கொடுத்து பரகதி அளித்திட பட்சமிகுந்தவா    
- இன்னமும்



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு