என்னா செய்குவேன் எனக்காய் ஏசுமைந்தன்


78. மலையாமி                    சாப்பு தாளம் (63)

பல்லவி

          என்னா செய்குவேன் எனக்காய் ஏசுமைந்தன்
          ஈனக்குருசிலுயிர் விட்டனர்.

1.         கண்ணினால் யான் செய்த கர்மம் தனைத்தொலைக்க
            முண்முடிதனை அந்த முன்னேன் சிரசில் வைத்து
            மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்
            பாங்குடன் நோக்கையில் ஏங்குதே என துள்ளம்            - என்னா

2.         பாவப்பாரம் நிறைந்த பாவி எத்தனை மீட்க
            ஜீவபரன் நீசச்சிலுவையில் மாண்டனர்
            ஆவிதுடிக்குதையா அங்கம் உருகுதெந்தன்
            தேவன் எனக்குச் செய்த செயலை நினைக்கும் போது    - என்னா

3.         கையிலறைந்த ஆணி கடினமாய் நரம்பினில்
            ஐயோ உருவிச் சென்று அப்புறம் பாய்ந்ததே
            ஐயோ இது என்பாவம் அடியேன் நான் என்செய்வேன்
            துய்யன் நீர் வாதைப்பட்டு துஷ்டனை மீட்டிரே - என்னா

4.         எந்தனை மிட்க நீர் இப்பாடுபட்டதால்
            இதற்கு பதிற் செய்ய என்னாலேயாகாது
            சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழுத்தத்தம்
            வந்தெனை ஆட்கொள்வாய் மகத்வ மனுவேலா             - என்னா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு