அன்று கிறிஸ்து மரித்திடச் சூரியன் அப்போதே மறைய ஐயையோ


79. செஞ்சுருட்டி                       ரூபக தாளம் (64)

1.       அன்று கிறிஸ்து மரித்திடச் சூரியன் அப்போதே மறைய ஐயையோ
            ஆண்டவர் பாதகரோடு சிலுவையதுதனில் தொங்கிடவே
           
2.         குன்று உலகும் நடுங்கிடக் கல்லறை குன்று திறந்திடவே ஐயையோ
            கொற்றவன் ஏசுகிறிஸ்து மரித்ததைக் கூற முடியாதே

3.         மைந்தனே என்று புலம்பி மரியாள் தன் மார்பில் அறைந்திடவே - ஐயையோ
            மாசணுகாத கிறிஸ்துவின் ரத்தம் வழிந்து ஒழுகினதே

4.         இட்டமுடனே யான் பெற்று வளர்த்திட்ட என்னுட கண்மணியே - ஐயையோ
            ஏசுக் கிறிஸ்துவே இத்தனை பாடுகள் ஏதுமக்கையாவே

5.         பட்டமரம் போன்ற நீசருக்காகவே பாடுபட்டீர் பரனே ஐயையோ
            பாராமலும்மைக் கனியாமல் யூதர்கள் பற்றிப்பிடித்தனரே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு